மாத்தையாவின் கதை - இறுதிப்பகுதி

மாத்தையாவைப் பற்றிய முதல் சந்தேகம் ஒற்று அமைப்பின் தலைவரான பொட்டு அம்மன் என்றழைக்கப்படும் சண்முகலிங்கம் சிவசங்கரனுக்கு, அமிர்தலிங்கம் கொல்லப்பட்டதிலிருந்து ஏற்பட்டது. இதன் பிறகு உள்ளுக்குள்ளேயே ஒரு பிரிவு மாத்தையாவின் தளத்திலிருந்து பரிமாறப்படும் அனைத்துச் செய்திகளையும் இடைமறித்துக் கேட்கலானது. பொட்டு அம்மன்
இதில் தனிக் கவனம் செலுத்தி வந்தார்.

போதிய தகவல் அளிக்கப்பட்டபின் பிரபாகரன் மாத்தையா மீதான 10-பக்க குற்றப் பத்திரிகை ஒன்றை யாழ் மக்களுக்கு முன் வாசித்துக் காட்ட ஆணையிட்டார். அதன் விளக்கங்களை சூலை 31க்குள் பதிலளிக்க வேண்டுமென்றும் கூறப்பட்டிருந்தது. மாத்தையா இந்த குற்றப்பத்திரிக்கையை அலட்சியப் படுத்தினார். யார் கொடுத்த தைரியத்தில் அப்படி அலட்சியப்படுத்தினார் என்பது குழப்பமாகவே இருந்தது. மாத்தையா தன்னிடம் வந்த இயக்கத்தினரிடம் "வேண்டுமானால் பிரபாகரன் இங்கு வந்து என்னுடைய விளக்கங்களைக் கேட்டுக் கொள்ளட்டும்" என்று சொன்னதாகத் தெரிகிறது. இந்த அலட்சியம், பொட்டு அம்மனின் கணிப்பை மேலும் உறுதிப்படுத்துவதாக அமைந்தது. அதுவே அன்று முதல் மாத்தையாவின் இறக்கத்திற்கும் கடைசியில் இறப்பிற்கும் காரணமாக அமைந்து போனது.

அப்போது அரசியல் பிரிவான மக்கள் முண்ணனியின் முக்கியப் பொறுப்பில் இருந்த மாத்தையா கொழும்பில் பல பேர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினைப் பெற்றhர். அந்த நெருக்கமே பிற்பாடு அவரின் நடத்தையில் மாற்றத்திற்கு காரணமாக அமைந்திருக்க வேண்டும்.

மேற்படி சம்பவத்திற்குப் பின் மாத்தையா அரசியல் பிரிவின் பொறுப்புக்களில் இருந்து விடுவிக்கப்பட்டார். பிறகு ஒரு அதிகாரமில்லாத பதவியை, அதாவது, அகதியாய் வந்தோரின் நலமும் மற்றும் காயமடைந்த புலிகளின் நலம் பேணுவதுமான ஒரு துறை அளிக்கப்பட்டது. அவருக்கு ஒரு சலுகையாக அவரின் 75 பேரைக்கொண்ட பாதுகாப்புக்குழுவும் அனுமதிக்கப்பட்டது.

இதன் பின் தொடர்ச்சியாக மாத்தையாவின் இடத்திற்கு பேபி சுப்ரமண்யம் நியமிக்கப்பட்டார். அதாவது பிரபாகரனுக்கு அடுத்த இரண்டாவது இடத்தைப் பெற்றார். இதன் பின் சில வினோத சம்பவங்கள் நடைபெற்றன. தெரிந்தோ தெரியாமலோ மாத்தையாவிற்கு அதில் தொடர்பு இருப்பதாகப் பட்டது. அந்த சம்பவங்களாவன.

1. கோப்பாய் அருகில் பொட்டு அம்மனும் அவரது ஆட்களும் ஒரு வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது கையெறி குண்டு வீசப்பட்டது. ஆனால் பொட்டு அம்மன் பெருங்காயத்துடன் உயிர் பிழைத்தார்.

2. சென்னைக்கருகில் இந்தியக் கப்பற்படையினுடான மோதலில் கிட்டு மாண்டது.

கிட்டுவைப் பற்றி ஏற்கனவே பார்த்தோம். அந்த மாவீரனைப் பற்றிப் பேச நிறைய விஷயம் இருக்கிறது.

கிட்டுவின் மரணத்தில் மாத்தையாவிற்குத் தொடர்பு இருக்கிறது என்று முக்காலே மூணு வீசம் ஊகம் ஏற்பட்ட உடனேயே ஒரு அதிரடிப்படை அமைக்கப்பட்டது.

இந்தச் சமயத்தில் கனடாவிலிருந்து வந்த மஞ்சரி என்ற இதழைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். மஞ்சரி இதழின் ஆசிரியர் டிபிஎஸ் ஜெயராஜ் மாத்தையாவின் நிலையைப் பற்றி விரிவாக அவ்வப்போது சுடச்சுட செய்தி வெளியிட்டுக் கொண்டிருந்தார். இதன் மூலம் தமிழர்கள் மத்தியில் அந்தப் பத்திரிகை வெகு பிரபலமானது. பிற்பாடு இயக்கத்தினரின் நெருக்கடி தாங்காமல் அந்தப் பத்திரிக்கையை மூடவேண்டி வந்தது.

யாழ்ப்பாணத்தில் என்ஜினியர் என்றழைக்கப்படும் மாணிக்கவாசகம் மகேந்திரராஜா என்பவர் மாத்தையாவின் தளத்திலிருந்து திரும்பும்போது பொட்டு அம்மன் குழுவினரால் கைது செய்யப்பட்டார். அவர் யாழ்கோட்டை சமரில் காலிழந்தவர். என்ஜினியர் தான் மாத்தையாவின் கைது செய்வதற்கான உறுதி முடிவை எடுக்குமளவிற்கான செய்தியளித்தார். அது தனிக் கதை. "ரா" வைப் பற்றிப் பின்னப்பட்ட ஒரு பரபரப்புக் கதையது.

பொட்டு அம்மன் தலைமையில் கமாண்டோ தலைவர் சொர்ணம், பால்ராஜ் மற்றும் கடற்புலித் தலைவர் சூசை மற்றும் இயக்கத்தினருடன் மார்ச் 31, 1993ம் நாளன்று கொக்குவில்லில் இருக்கும் மாத்தையாவின் இடத்திற்கு அதிகாலையில் சென்றனர். அவர்கள் மாத்தையாவின் ஆட்களை அதிக எதிர்ப்பின்றி வெற்றிகொண்டனர்.

அதிரடிப்படை மாத்தையாவைக் கைது செய்து சாவகச்சேரியில் உள்ள ஒரு முகாமிற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றது. அதே சமயம் சுரேஷ் என்ற மாத்தையாவின் வலது கரமானவர், புத்துர் அருகே பிரபாகரனின் மெய்க்காப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்ட மாத்தையாவின் ஆளைச் சந்தித்து சில ஆணைகளைச் சொல்லச் சென்றிருந்தார். அது என்ன ஆணை, யாரந்த நபர் என்பது பொட்டு அம்மனுக்குத் தான் வெளிச்சம். சுரேஷ் மற்றும் அந்த மெய்க்காப்பாளர் பின்னர் கைது செய்யப்பட்டனர்.

1995-ல் ஒரு இந்திய சுதந்திர தினத்தன்று வேலூர்ச் சிறையிலிருந்து 43 கைதிகள் 153-அடி நீளமுள்ள சுரங்கம் தோண்டித் தப்பித்தனர். அவர்கள் எப்படி அந்த மண்ணை அகற்றினர் எப்படித் தப்பித்தனர் என்பது யாராலும் நம்ப முடியவில்லை. 43 பேரும் பல்வேறு திசைகளில் தப்பிச் சென்றனர். அவர்களில் 12 பேர் மட்டுமே பிற்பாடு பிடிபட்டனர். மீதம் உள்ள 31-பேரைப் பற்றி தகவல் இல்லை. அதில் 14 இயக்கத்தினரை ஏற்றிச் செல்ல விரைவுப் படகு
அனுப்பப்பட்டிருந்தது. 14 பேருக்கும் யாழ் நகரில் ராஜமரியாதை அளிக்கப்பட்டு வரவேற்பு செய்யப்பட்டிருந்தது. சில நாட்கள்தான். இயக்கத்தினரின் யாழ் அலுவலகத்திற்கு வந்த ஒரு கடிதம் நிலையைத் தலைகீழாக மாற்றியது. அவர்கள் 14 பேரும் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர். அதாவது "ரா" வின் உதவியோடுதான் அவர்கள் தப்பியதாகவும் 1994-லேயே கொல்லப்பட்டுவிட்ட மாத்தையாவை மீட்க அவர்களை 1995ம் வருடம் "ரா" அனுப்பியிருக்கிறது என்று ஒரு அருமையான கதை சொல்லப்பட்டது. இதில் ஒரு விஷயம் இன்னும் குழப்பமாகவே உள்ளது. மாத்தையா டிசம்பர் 28, 1994ல் கொல்லப்பட்டதாக
அடில் பாலசிங்கம் குறிப்பிடுகி்றர். ஆனால், இயக்கத்தினர் 1998-ம் ஆண்டு கூட மாத்தையாவைப் பார்த்ததாக சொல்லப்படுகிறது. உண்மை என்ன என்பது இயக்கத்தினர் தம் வரலாற்றில் எழுதுவார்கள் என்று நம்புவோமாக.

ஒருவாராக மாத்தையா என்ற வீரனின் கதை ஈழத்தமிழர் போராட்டத்தின் வரலாற்றில் கடந்துபோன ஒரு காட்சியாகிப் போனது.

மாத்தையாவுடன் இணைந்து செயல்பட்ட ஒவ்வொருவரின் வாக்குமூலத்தையும் தனித்தனியாக வீடியோ எடுத்து வைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. பிற்பாடு இயக்க வரலாற்றில் கறையேற்படும்படியாக யாரும் பேசிவிடக்கூடாது என்பதற்காக இருக்கலாம்.

ஆக, சிலரின் ஆசைவார்த்தையின் பேரில் குறுக்கு வழியில் அதிகாரம் அடைய ஆசைப்பட்டு எட்டப்பர்களில் ஒருவராய் போனது அந்த வீரனின் துரதிர்ஷ்டம் தான். தமிழர் வீர வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் இப்படி ஒரு சிலர் தோன்றிக் கொண்டேயிருப்பது தான் தமிழர்களின் சாபம் போலும்.

8 இப் பதிவைப் பற்றிய கருத்துக்கள்:

Anonymous said...

test

Anonymous said...

மாத்தையாவால் நியமிக்கப்பட்ட பிரபாகரனின் மெய்க்காப்பாளரின் பெயர் சுசிலன் என்பதாகும்

Anonymous said...

தற்போதைய எட்டப்பன் கருணாவைப் பற்றியும் எழுதுங்களேன்.

Anonymous said...

என்ன இப்படி சப்புன்னு முடிச்சிட்டிங்க...

Anonymous said...

நீங்கள் சொல்வதுபோல் வேலூரிலிருந்து 43 பேர் தப்பித்த சம்பவம் இத்தோடு தொடர்புபடுத்தப்படவில்லை.
அச்சம்பவத்தில் தப்பித்தவர்களில் குறைந்தது 3 பேர் தமிழக மண்ணிலேயே சயனைட் உட்கொண்டு சாவடைந்ததிருந்தனர்.

ஆனால் வேறொரு தப்பித்தல் சம்பவம் தொடர்புபட்டது.
அது RAW அமைப்பே திட்டமிட்டுச் செய்த தப்பித்தல் என்பதுதான் தகவல்.
'கிருபன்' உள்ளிட்ட 3 பேரைத் தப்பிக்க வைத்தது. அத்தப்பித்தலுக்காகச் சுட்டுக்கொல்லப்பட்ட 3 இந்தியக் காவலாளிகளின் கொலை தொடர்பான சந்தேகமே முதலில் புலிகளை எச்சரிக்கைப்படுத்தியது.

பின்வந்த விசாரணைகளில் மாத்தையாவின் நடவடிக்கை நடந்துகொண்டிருந்த நேரத்தில் சமாந்திரமாக இன்னொரு முனைப்பும் நடந்துகொண்டிருந்தது தெரிய வந்தது.
மாத்தையா சம்பவம் பெருமளவு வெளியில் தெரிந்தது, ஆனால் கிருபன் சம்பவம் வெளித்தெரியவில்லை.

Anonymous said...

ஏங்க கிட்டுவ இந்திய ராணுவம் கொல்லேக்கை மாத்தையா உயிரோடையே இல்லையே. பிறகென்ன மாத்தையாவின் சதி என்று கதை அளக்கிறியள்?

said...

ஜனவரி 16 1993 அன்று எம்.வி அகத் என்ற பெயருடைய அந்தக் கப்பல் சென்னைத் துறைமுகத்திற்கருகே இந்தியக் கடற்படையால் சுற்றிவளைக்கப்பட வேறு வழியில்லாமல் கப்பலுக்கு தீவைத்துவிட்டு கிட்டு உட்பட ஆறுபேர் சயனைடு சாப்பிட்டார்கள்.

மாத்தையாவை பொட்டு அம்மன் குழு அவரது வீட்டில் வைத்து கைது செய்த நாள், மார்ச் 31 1993.

தற்போது உங்களுக்கு விளங்கியிருக்கும் தானே...

said...

எனக்கு ஈழ வரலாறு பற்றி தெரியாது,ஆனால் மாத்தையா நேசித்த பெண்ணை பிரபாகரன் நேசித்ததும் ஒரு காரணம் அவர் மரணத்திற்கும் காரண்ம்
என்று நான் அறிந்தேன்,ஊருக்கு ஒரு சட்டம் தனக்கு ஒரு சட்டம் என்ற தலைவரின் கொள்கையும் நான் அறிந்த விடயங்கள்(விடுதலை புலிகள் அமைப்பில் உள்ளோர் காதல் திருமணம் செய்தல் தடை செய்யப் பட்டது என்று அறிவிக்கப்பட்டும் தான் அதை மீறி நடந்தமை),